Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசு விரைந்து முடிவெடுக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் குழு, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் உத்தரவுப்படி, 21 அமைச்சர்களும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களும் கலைக்கப்பட்டதாகத்  தெரிய வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், 'மத்திய அமைச்சகங்களுக்கும், இலாகாக்களுக்கும் கூடுதல் அதிகாரம் 21  அமைச்சர்கள் குழுவையும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களையும் கலைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் முடிவுகள் விரைந்து எடுக்கப்படும் என்பதோடு, அமைச்சகங்களுக்கும் கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்படும். மேலும், அமைச்சர்கள் குழுக்கள் முன் நிலுவையில் உள்ள விவகாரங்களில் இனி அமைச்சகமே முடிவெடுக்கும்.

அமைச்சர்கள் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏறப்ட்டால், கேபினெட் செயலரும், பிரதமர் அலுவலகமும் உதவி செய்வார்கள். விரைந்து முடிவுகள் எடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விரைந்து முடிவெடுக்கும் வகையில் அமைச்சர்கள் குழு கூண்டோடு கலைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com