Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 01-06-2014 | Raasi Palan 01-06-2014

பதிந்தவர்: தம்பியன் 01 June 2014

மேஷம்
சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். வாகன யோகம் உண்டு. பணவரவு திருப்தி தரும். நூதன பொருட் சேர்க்கை உண்டு.

ரிஷபம்
பாராட்டும் புகழும் கூடும் நாள். உள்ளம் மகிழும் விதத்தில் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். பொழுதுபோக்கு, உல்லாச நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும்.

மிதுனம்
மறதி அதிகரிக்கும் நாள். உடல் நலத்திற்காக சிறிது செலவிடும் சூழ்நிலை உருவாகும். பிற்பகலில் பணவரவுகள் திருப்தி தரும். மனப்பயம் அகலும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு.

கடகம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர் ஒருவரை சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.

சிம்மம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். இருப்பினும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பு உண்டு. தொலைதூரப் பயணங்கள் செல்ல நேரிடலாம். கட்டிடப் பணி தொடரும்.

கன்னி
பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடையும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரலாம்.

விருச்சகம்
ஆனந்தம் பெருக ஆனைமுகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வது நல்லது. கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

தனுசு
வரவும் செலவும் சமமாகும் நாள். சுபச் செய்தியன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம். ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிடும் சூழ்நிலை உருவாகும். கனவுத் தொல்லை, தூக்கமின்பம் ஏற்படலாம்.

மகரம்
கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

கும்பம்
பிள்ளைகளின் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.

மீனம்
வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி ஸ்தல வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 01-06-2014 | Raasi Palan 01-06-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com