மேஷம்
செல்வ நிலை உயரும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்
பொன்னான நாள். புகழ் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள். கடிதங்கள் சுபச்செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
மிதுனம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆச்சர்யப்பட வைக்கும்.
கடகம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் வீட்டிற்கு வராத உறவினர் ஒருவர் இன்று திடீரென வரலாம்.
சிம்மம்
வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்குமோ என நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கலாம். தேக ஆரோக்ய குறைவுகளால் உற்சாகம் குறைய நேரிடும்.
கன்னி
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீட்டுப் பராமரிப்புச் செலவு கூடும். ஒரு வகையில் வந்த வரவுகள் மற்றொரு வழியில் செலவாகலாம். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
துலாம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். மாமன், மைத்துனர்களின் சந்திப்பால் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக உதிரி வருமானங்கள் வந்து சேரலாம்.
விருச்சகம்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன் வருவர். வருமானம் இரு மடங்காகும்.
தனுசு
மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். மறதியால் விட்டுப் போன காரியமொன்றை மீண்டும் செய்து முடிக்கும் எண்ணம் மேலோங்கும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.
மகரம்
வழிபாட்டால் வளர்ச்சியைக் காண வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வேலைகள் உடனுக்குடன் முடியாமல் நண்பர்கள் இழுத்தடிக்கலாம். ஆரோக்யத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.
கும்பம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உற்றார், உறவினர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். நீண்ட தூரப் பயணங்கள் செல்வதில் நாட்டம் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரலாம்.
மீனம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உத்தியோக மாற்றச் சிந்தனை உருவாகும்.
0 Responses to இன்றைய ராசி பலன் 06-06-2014 | Raasi Palan 06-06-2014