Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 08-06-2014 | Raasi Palan 08-06-2014

பதிந்தவர்: தம்பியன் 08 June 2014

மேஷம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

ரிஷபம்
மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சுற்றுப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் மீது பிரியம் கூடும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

கடகம்
வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உடன் பிறப்புகளால் உற்சாகம் அதிகரிக்கும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.

சிம்மம்
நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பிரியமான சிலரைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

கன்னி
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. கை மாற்றாகக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்பணர்ச்சி தேவைப்படும் நாள். அத்யாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும்.

விருச்சகம்
வருமானம் திருப்தி தரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறலாம். விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு.

தனுசு
நினைத்ததை செய்து முடிக்கும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் ஏராளம் நடைபெறும்.

மகரம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் செலவிட்டு மகிழ்வீர்கள். தந்தை வழியில் கணிசமான பணவரவுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு. புன்சிரிப்புடன் எதையும் செய்வீர்கள்.

கும்பம்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரின் சந்திப்பு கிட்டும்.

மீனம்
நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். பிரியமாகச் சிலர் கேட்டதை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். நீண்ட பயணங்கள் செல்வதில் நாட்டம் செல்லும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 08-06-2014 | Raasi Palan 08-06-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com