ஈழத் தமிழர்களுடன் இந்திய மத்திய அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளக் கூடாது என்று, ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
மகிந்தராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளரான அவர், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஸில் உள்ள இந்துக்களுடன் நேரடியா பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை இந்தியாவுக்கு இல்லாததைப் போல, இலங்கையில் உள்ள தமிழர்களுடன் நேரடிய தொடர்புகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு உரிமை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அரசியல் விரோதங்களை கருதி, நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்பை மறுத்திருக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக இலங்கை தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
0 Responses to ஈழத் தமிழர்களுடன் இந்திய மத்திய அரசாங்கம் நேரடியாகப் பேசக்கூடாது – சுவாமி!