Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தும், இலங்கைப் பிரச்சினையில் அவர் விரைந்து தலையிட்டு தமிழ் மக்களுக்கு சுமூகமான தீர்வை பெற்றுத்தரக் கோரியும் விசேட பூஜையுடன் கூடிய நடைபவணி ஒன்று இன்று நடைபெற்றது.

இந்து சமயப் பேரவையும், இலங்கை இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாட்டினைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட நடைபவணி வீரமாளி அம்மன் ஆலயத்தினைச் சென்றடைந்து அங்கிருந்து அம்மன் வீதியுடாக பலாலிவீதியினை அடைந்து அவ்வீதியில் இருந்த இந்து சமயப் பேரவையின் முன்றலில் முடிவடைந்தது.

ஆன்மிகவாதி மோடிக்கு வாழ்த்துக்கள், பிரதமர் மோடிக்கு எமது முழுமையான ஆசிகள், மதமாற்றத்தினை தடுத்து நிறுத்து, இந்து இன்றே ஒன்றுபடு, இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம் என்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் தாங்கியவாறு குறித்த நடைபவணியில் கலந்து கொண்டவர்கள் காணப்பட்டனர்.

மேலும் இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திரமோடி கடந்த காலங்களில் தனக்கென எதனையும் வைத்திருக்காது பிற மக்களுக்கான வாழ்ந்து காட்டியவர்.

இதனால் அவர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவிகளை செய்வார் என்று நம்புகின்றோம்.

மிக நீண்ட காலமாக இங்குள்ள இனப்பிரச்சினை தீர்பதற்கும் அவர் உதவி செய்ய வேண்டும். இச் செயற்பாடுகளை அவர் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் நடைபவணியில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

0 Responses to மோடி தமிழர்களுக்கு சுமூகமான தீர்வு பெற்றுத்தர வேண்டும் என யாழில் நடைபவணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com