Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் பொருளாதாரம், அரசியல், கலாசாரம் என்று அனைத்து வழிகளிலும் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். எனவே, ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியமுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பத்தினை ஐக்கிய தேசியக் கட்சி சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் புதிய ஆட்சியை ஏற்படுத்தும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது: ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com