நாட்டு மக்களின் நம்பிக்கையையும், விருப்பத்தையும் அரசு நிறைவேற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி, உறுதியுடன் கூறியுள்ளார்.
16 வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்த நரேந்திர மோடி, வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜனநாயகத்தின் கோயில் என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மூலம் மக்களின் தேவைகளையும், விருப்பத்தையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறினார்.
பாஜக தலைமையிலான அரசின் முதல் மக்களவை இன்று தொடங்கிய வேளையில்,மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
0 Responses to நாட்டு மக்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் நிறைவேற்ற பிரதமர் உறுதி!