Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலுள்ள கர்ட்டின் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் புதன்கிழமை இந்து சமுத்திரத்தின் ஓர் கடலடிப் பகுதியில் பதிவு செய்யப் பட்ட மர்ம ஒலி மாயமான MH370 விமானத்தின் இறுதித் தருணங்களில் வெளிப்பட்ட ஒலியாக இருக்கலாம் என ஐயம் தெரிவித்துள்ளனர்.

மிக நுணுக்கமான கடலடி ஒலிகளை (மறைமுக அணுகுண்டுப் பரிசோதனை வெடிப்புக்களாக இருந்தாலும்) திருத்தமாகப் பதிவு செய்யும் கேள் கருவிகளில் இந்த ஒலி பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதில் பல உபகரணங்களில் பதிவு செய்யப் பட்ட ஒத்த ஒலி சமிக்ஞை MH370 விமானத்தின் வெடிப்பு ஒலியாக அல்லது இயற்கை ஒலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என குறித்த பல்கலைக் கழகத்தின் CMST கடலாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஒலி விமானம் கடலுடன் மோதி வெடித்த போது ஏற்பட்ட ஒலியாக இருப்பின் அது வெளிவந்த இடத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டி அல்லது சிதைவுகளைக் கண்டு பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் CTBTO எனப்படும் இந்த தொழிநுட்பம் பொதுவாக அத்திலாந்திக்கா பகுதியில் பனிப்பாறைகளின் வெடிப்பு மற்றும் கடலடி எரிமலை வெடிப்புக்களைக் கண்டு பிடிக்க உபயோகிக்கப் படும் தொழிநுட்பமாகும்.

இதேவேளை MH370 விமானம் காணமற் போய் 3 மாதங்கள் ஆகவுள்ள நிலையில் குறித்த விமானத்தின் பயணிகளின் உறவினர் தமது உறவினர்களின் கதி குறித்து அறிவதற்கு சட்ட ரீதியாக கவுன்சில் அமைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மேலும் மலேசியன் ஏர்லைன்ஸும் போயிங் நிறுவனமும் குறித்த ஒவ்வொரு பயணியின் உறவினருக்கும் குறைந்தது $175 000 டாலர்கள் இழப்பீடு வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

0 Responses to இந்து சமுத்திரக் கடல் அடியில் இருந்து கேட்கப் பட்ட மர்ம ஒலி MH370 விமானத்தினுடையதா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com