இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முயற்சி மேற்கொண்டிருந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.
தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், புதுடில்லிக்குப் பயணம் மேற்கொண்டால், மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் இணக்கமான சூழல் நிலவுவதான தோற்றம் ஏற்பட்டு விடும் என்பதால், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார்.
இந்த அழைப்புக்கு பின்னாலும், அது நிராகரிக்கப்பட்டதற்கு பின்னாலும், பல இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் இருந்தன.
இந்த அழைப்பை அவர் நிராகரித்ததை, அரசதரப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது புதிய நல்லிணக்க முயற்சிக்கான வாய்ப்பு என்றும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், நழுவ விட்டுவிட்டார் விக்னேஸ்வரன் என்றும் அரச தரப்பிலுள்ள அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பலரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆனால், இப்படி அரசதரப்பினர் கூறிக் கொள்வது இது தான் முதன்முறையல்ல.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு நிகழ்த்தவிருந்த உரையொன்று புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பினால், ரத்துச் செய்யப்பட்டது.
அப்போது, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அதில் அறிவிக்கவிருந்ததாகவும், அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார் என்பது பலருக்கும் நினைவில் இருக்கலாம்.
ஆனால், அந்தச் சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகி விட்ட போதிலும், இன்னமும் கூட தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறவேயில்லை.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் அதைக் கூறுவேன் என்ற பிடிவாதம் அவருக்கு இருக்கிறதோ தெரியவில்லை.
இங்குள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை இங்கே தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை.
அந்த உரை தடுக்கப்பட்டது என்பதால், வாய்ப்பு நழுவி விட்டதாக அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதுபோலத் தான், இப்போதும் நடந்திருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதுடில்லி சென்றிருந்தால், எல்லாமே நடந்திருக்கும் போல அமைச்சர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இந்தப் பயணம் என்ன வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கப் போகிறது?
ஆரம்பத்தில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் அரசியல் வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல், முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசாங்கத்துடன் இணக்கப் போக்கை கடைப்பிடிக்க முயன்றார். ஆனால், அதன் பலன் என்னவாயிற்று?
அவருக்கான அதிகாரங்களை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி முடக்கிப் போட்டார். தலைமைச் செயலரைக் கூட மாற்றிக் கொள்ள முடியாதளவுக்கு மாகாண முதலமைச்சரின் அதிகாரங்கள் செயலற்றதாக்கப்பட்டன. அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை அரசாங்கம் வெறும் டம்மியாகவே மாற்றி விட்டுள்ளது. இப்படித் தான், வடக்கு மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு சீர்குலைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் உருவாக்க விரும்பினால், முதலமைச்சரை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசலாம். பிரச்சினைகளைத் தீர்த்து இடைவெளியைக் குறைக்கலாம்.
புதுடில்லிக்கு அழைத்துச் சென்று தான், நல்லிணக்க வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றில்லை.
புதுடில்லிக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்துச் சென்றிருந்தால், இந்தியப் பிரதமரையும், ஜனாதிபதியையும் அறிமுகப்படுத்தி வைத்திருப்பார் ஜனாதிபதி.
அவ்வளவு தானே தவிர, அதற்கு அப்பால், அவர்களுடன் தமிழரின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்காது.
ஏனென்றால், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் போன்றோர் இருக்கும் போது, ஒரு மாகாண முதலமைச்சரால் அவ்வாறு பேச முடியாது. வெறுமனே நலன் விசாரித்துக் கொள்ளலாம், வாழ்த்துக் கூறிக் கொள்ளலாம் அவ்வளவு தான்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடன், முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்துச் செல்ல முயன்றதற்குக் காரணம், நல்லெண்ணம் என்பதை விட, இராஜதந்திரம் என்பதே சரியானது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களின், போது எந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்பதைப் பொறுத்து, அவருடன் செல்லும் குழுவினர் தீர்மானிக்கப்படுவதுண்டு.
அவர், ஐ.நாவுக்கோ, அமெரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ செல்லும் போது தமிழ் அரசியல்வாதிகள் எவரையாவது தனது குழுவில் சேர்த்துக் கொள்வார்.
முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லும் போது, முஸ்லிம் அமைச்சர்கள் அரசியல் வாதிகளையும், வத்திக்கான் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது, கத்தோலிக்க அரசியல்வாதிகளையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்வார்.
மற்றைய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, பொருத்தமான ஏனைய அரசியல்வாதிகளை இணைத்துக் கொள்வார்.
தன்னைச் சுற்றி, அந்த நாடுகளுடன் தொடர்புடையவர்களே இருக்கின்றனர் என்ற விம்பத்தை காண்பிக்கின்ற ஒரு முயற்சியே இது.
பொதுவாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளுக்கோ, ஐ.நாவுக்கோ செல்லும் போது, தமது தரப்பில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை அழைத்துச் செல்வார் ஜனாதிபதி மஹிந்த.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் கருணா எனப்படும் வி.முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சந்திரகாந்தன் போன்றவர்கள் இவ்வாறு பல நாடுகளுக்கும், ஐ.நாவுக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.
முதல்முறையாக, அரசதரப்பைச் சேராத ஒருவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதற்கு பல காரணங்கள் உள்ளன.
தமிழர் பிரச்சினை விவகாரத்தில், மன்மோகன் சிங் போல நரேந்திர மோடி இருக்கமாட்டார் என்றும், அழுத்தங்களைக் கொடுக்க முனையலாம் என்றும் இலங்கை அரசுக்கு ஒரு அச்சம் இருந்தது.
வடக்கு மாகாண முதலமைச்சரை அழைத்து கொண்டு சென்றால், தமிழர் பிரச்சினையை அவர் சரியாக அணுகுகிறார் என்ற ஒரு விம்பத்தை நரேந்திர மோடியின் மனதில் ஏற்படுத்த முடியும்.
புதுடில்லிக்கு அழைத்துச் செல்வதற்கு அரசாங்கத்தின் கையில் எந்த பொருத்தமான தமிழ் அரசியல்வாதியும் இருக்கவில்லை.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு, இந்தியாவில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பிரச்சினை.
முன்னாள் புலி உறுப்பினர் என்பதால், பிரதிஅமைச்சர் கருணாவை அங்கு கூட்டிச் செல்ல முடியாது.
எனவே, ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்தவே விக்னேஸ்வரனைத் தெரிவு செய்திருந்தார்.
ஆனால், அவர் மறுத்து விட, வேறு வழியின்றி யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவையும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானையும் அழைத்துச் சென்றிருந்தார்.
வடக்கு மாகாண முதல்வரை இந்தியப் பிரதமர் முன்பாக நிறுத்தி, இராஜதந்திர ரீதியாக தனக்கு ஒரு கவசத்தை ஏற்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் திட்டம்.
அவ்வாறு அவரை முன்னிறுத்தியிருந்தால், வடக்கு மாகாண சபைக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நெருங்கிய சுமுகமான உறவுகள் இருப்பதான தோற்றம் புதுடில்லியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
அதற்கான வாய்ப்பை முதல்வர் விக்னேஸ்வரன் வழங்கவில்லை.
ஒருவேளை, வடக்கு மாகாண சபையுடன், அரசாங்கம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்திருந்தால், நிச்சயமாக இந்த அழைப்பை அவரால் நிராகரித்திருக்க முடியாது.
இதனிடையே, விக்னேஸ்வரன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி மஹிந்தவுடன் புதுடில்லி சென்றிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அது பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும்.
அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டிலும் அது அவருக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்க காரணமாகியிருக்கும்.
இந்த விடயத்தில், அவர் ஒரு சில மணிநேரங்களுக்குள் எடுத்த துரிதமான முடிவு, தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் தவறானதாக கருதப்படவில்லை.
அதேவேளை, கூடிய விரைவில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு புதுடில்லியின் கதவுகள் திறக்கப்படக் கூடும்.
ஏனென்றால், நரேந்திர மோடி அரசாங்கம், இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் ஒரு சமநிலை அணுகுமுறையைப் பேணும் என்று தெரிகிறது.
அதைவிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விடுத்த அழைப்பினால் ஏற்பட்டுள்ள இடைவெளியையும் கோபத்தையும் குறைத்துக் கொள்ளவும், வேண்டியுள்ளது.
எனவே, விக்னேஸ்வரனையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, அழைத்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அத்தகையதொரு அழைப்பு, அரசாங்கத்தைப் பொறுத்தவரை, விரும்பத்தக்கதொன்றாக இருக்காது.
இனிமேலாவது, அரசாங்கம், வடக்கு மாகாண சபையுடன் அரவணைத்துச் செயற்படவும், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முன்வந்தால் தான், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கலாம்.
தமிழர் தரப்பை அரவணைக்காமல், சர்வதேச அழுத்தங்களில்இருந்து ஒருபோதும் விடுபட முடியாது.
-சத்ரியன்

0 Responses to அழைப்பும் நிராகரிப்பும் சரியான முடிவுகள் தானா? - சத்ரியன்