இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கவுள்ளதாக நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறிய கருத்து நகைப்பிற்குரியது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சொல்ஹெய்ம், யுத்தக் குற்றம் தொடர்பில் எந்தவொரு சர்வதேச நீதிமன்றிலோ, அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தயார் என அண்மையில் ஆங்கில வார இதழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்கும் தகுதி கிடையாது எரிக் சொல்ஹெய்மிற்கு இல்லையெனவும், அவரது கருத்து நகைப்பிற்குரியது எனவும் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சொல்ஹெய்ம் இலங்கை விவகாரங்களில் எந்த வகையிலும் பங்கேற்கவில்லை.
அதுமட்டுமின்றி, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி சொல்ஹெய்மிற்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் எவ்வாறு தோல்வியடைந்தது என்பது பற்றி மட்டுமே சொல்ஹெய்ம் விபரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிக் சொல்ஹெய்மின் சாட்சியத்தை சர்வதேச நிறுவனம் ஏற்றுக் கொண்டால் அதன் மூலமே, சர்வதேச விசாரணைகள் தவறானது என்பது புலனாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to எரிக் சொல்ஹெய்ம் சாட்சியமா? தகுதி இல்லை என்கிறது இலங்கை