உண்மையில் இந்தியாவின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரிக்குமாக இருந்தால், தமிழ் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் கடந்த கால அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளன.
ஆனால் யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள போதும், இன்னும் சிறிலங்கா அரசாங்கம் இந்த சட்டத் திருத்தத்தை அமுலாக்க சிறிதளவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது இந்தியாவின் கோரிக்கையை தட்டிக் கழிப்பதற்கு ஒப்பானது.
இந்த நிலையில், இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் கருத்துக் கணிப்பை நடத்தி, தொடர்ந்தும் ஐக்கிய இலங்கையில் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா? அல்லது இந்தியாவின் ஒரு மாநிலமாக தமிழ் பிரதேசங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்களா? என்று இந்தியா முடிவு செய்ய வேண்டும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

0 Responses to இந்தியாவின் நிபந்தனைகளை இலங்கை நிராகரிக்குமானால் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும் - ஆங்கில ஊடகம்