யாழ்.மாவட்டத்தில் இராணுவ தொண்டர் படைக்கென புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு பலாலி படைத்தலைமையகத்தில் நாளையதினம் வியாழக்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களிடையே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதற்கமைய புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்தோடு தற்போதும் புதிதாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் மறைமுகமாகவும் அதே நேரம் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முதற்கட்டமாக மாவட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மிகவும் பெரியளவிலான வரவேற்பு நிகழ்வுகளை பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நாளையதினம் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது.இந்நிகழ்வினில் இராணுவத்தளபதியும் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
0 Responses to இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிற்கு நாளை கௌரவமாம்!