Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றமை, அந்த நாட்டின் அகதி கொள்கை சரியில்லை என்பதையே காட்டுகிறது என்று, அவுஸ்திரேலியாவின் பசுமை கட்சி தெரிவித்துள்ளது.

பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஹன்சன் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இலங்கை அகதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

அதிக மன அழுத்ததுக்கு ஆளான நிலையில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் மற்றுமாரு இலங்கையர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், 80 சதவீதமான உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறான தற்கொலை சம்பவங்கள், ஈழ அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா பின்பற்றும் கொள்ளையில் உள்ள குறைப்பாட்டின் விளைவே என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அவுஸ்ரேலியாவில் ஈழ அகதிகளின் தற்கொலைகள்! அகதிகள் கொள்கை சரியில்லை - பசுமைக்கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com