இறுதி மோதல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதானால் இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது தமிழ் மக்களின் வாக்குகளைத் தக்க வைப்பதற்கு நடத்தப்படும் நாடகமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்தோடு, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமைய போவதில்லை. தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to சர்வதேச விசாரணை நடத்தப்படுவதால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது: ஜே.வி.பி