Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உபியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐநா சபைக் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் உபியில் இரண்டு சிறுமிகள் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் மாட்டி தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தி உள்ள நேரத்தில் ஐநா சபை இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறுமிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையில் பாஜக மகளிர் அணியினர் உபியில் உள்ள சமாஜ்வாதிக் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

0 Responses to உபியில் சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்:ஐநா சபை கண்டனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com