கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடாளாவிய ரீதியினில் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலை வாயிலில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இன்றைய தமது போராட்டத்திற்கு மாணவர்கள் முழு அளவினில் ஆதரவு தந்து விரிவுரைகளை பகிஸ்கரித்ததாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் அறிவித்துள்ளது.போராட்டத்தின் எதிரொலியாக கற்றல் செயற்பாடுகள் ஏதும் நடைபெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to யாழ்.பல்கலைக்கழகம் இன்று செயலிழந்தது!