வவுனியா பாரதிபுரத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஐந்து பாகிஸ்தானிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் றிசாட்பதியுதீனுடன் இணைந்து அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிபுரம் பகுதியில் கடந்த 1977ம் ஆண்டு முதல் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்கள் வாழந்து வருகின்றனர்.
அந்த பகுதியில் பாகிஸ்தானுடன் இணைந்து தொழிற்சாலை ஒன்றை கட்டும் முயற்சியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு, சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப் படையினருடன் வந்த குறித்து ஐந்து பாகிஸ்தானிய அதிகாரிகள், அங்குள்ள 40 தமிழ் குடும்பங்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to பாரதிபுரத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்களை வெளியேற்ற பாகிஸ்தான் அதிகாரிகள் முயற்சி!