குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தியாக, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜூன் 12ம் திகதியான நாளை குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட உள்ளது. இந்நிலையில் குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்கிற கூற்றுக்கு இணங்க கல்வியே குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்தது என்று பெற்றோரும், மற்றோரும் உணர்ந்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகளின் கல்வி சிறக்க பள்ளிகளில் சீருடைகள் , சத்துணவு, பெண் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகள், காலணிகள், புத்தகப்பை, கட்டனமில்லாக் கல்வி, விலையில்லாப் புத்தகங்கள் என்று தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார் முதல்வர். அதோடு, குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதுக் கண்டறியப்பட்டால், குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்கள் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளதோடு, குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும்: ஜெயலலிதா