Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரைவாசிக்கும் குறைவான அங்கத்துவ நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணைக்கான பிரேரணையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் 26 வது மனித உரிமைகள் மாநாடு இன்று ஆரம்பமானது.

இதன் போது சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை குழு குறித்து ஆணையாளர் நவநீதம் பிள்ளை உத்தியோபூர்வமாக அறிவித்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா தமது பிரேரணை முன்வைத்த போது, சில நாடுகள் அதனை எதிர்த்து வாக்களித்திருந்ததுடன், சில நாடுகள் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

எனினும் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதும், வாக்களிப்பில் கலந்துக் கொள்ளாத நாடுகளையும், இந்த பிரேரணைக்கு வாக்களிக்காத நாடுகள் என்றே சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகிறது.

இதன் அடிப்படையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

0 Responses to சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜெனீவாவில் சிறீலங்கா அரசாங்கம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com