Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 11-06-2014 | Raasi Palan 11-06-2014

பதிந்தவர்: தம்பியன் 11 June 2014

மேஷம்
முருகன் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். மாலை நேரத்தில் வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது கவனம் தேவை.

ரிஷபம்
பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடையும் நாள். சிலருக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நீண்டநாள் ஆசையன்று நிறைவேறும்.

மிதுனம்
ஒற்றுமை கூடும் நாள். குல தெய்வப் பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் விலகும். புண்ணிய காரியம் செய்யும் சிந்தனை மேலோங்கும்.

கடகம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். நீண்டநாளையப் பிரச்சினையன்று நிறைவேறும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சிம்மம்
வாகன யோகத்தால் வளம் காணும் நாள். இலட்சியக் கனவுகள் நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தாய்வழி ஆதரவு கிடைக்கும்.

கன்னி
குடும்பப் பிரச்சினைகள் தீர குமரனை வழிபடவேண்டிய நாள். புதிய சொத்துக்களை வாங்கிச்சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பஞ்சாயத்துக்களில் தலைமைப் பொறுப்பேற்பீர்கள். உடல் நலம் சீராகும்.

துலாம்
எதிர்காலம் இனிமையான திட்டங்கள் தீட்டும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். பொதுநல ஈடுபாட்டால் புகழ் பெறுவீர்கள். குடும்பத்தில் சுகங்களும் சந்தோஷங்களும் கூடும்.

விருச்சகம்
வெற்றிகள் வந்து சேர வேலவனை வழிபடவேண்டிய நாள். திடீர் பயணங்களால் தித்திக்கும்செய்தி வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைபேசிவழி தகவல்களால் மகிழ்ச்சி கூடும்.

தனுசு
வருமானம் பெருக வழி காணும் நாள்¢. தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். எந்த முக்கிய முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது. அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்குவது நல்லது.

மகரம்
உத்தியோகத்தில் உயர்வு காணும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அஞ்சல்வழிச் செய்தி நெஞ்சை மகிழ்விக்கும். வியாபார ரீதியாக வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.

கும்பம்
வருமானம்பெருக வடிவேலனை வழிபட வேண்டிய நாள்¢. தனிப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். கலகலப்பாகப் பேசி மற்றவர்களை மகிழ்விப்பீர்கள்.

மீனம்
காரிய வெற்றி காண கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். பிறர் பொறுப்புகளை எடுத்துச் செய்யும் சூழ்நிலை உருவாகும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

0 Responses to இன்றைய ராசி பலன் 11-06-2014 | Raasi Palan 11-06-2014

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com