வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்தின் பகுதிக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரித்தானியா தன்னுடைய கரிசனையை வெளியிட்டுள்ளது.
வடக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 2011 ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டமையை பிரித்தானியா அன்று வரவேற்றதாகவும், அது மோதலுக்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளில் ஆரோக்கியமான சமிக்ஞையை வெளிக்காட்டியதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள் மீள் அமுல்படுத்தப்படுகின்றமையானது பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இலங்கையில் உள்ள உறவினர்களை பார்வையிட வருகின்றவர்களை மிகவும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளை எந்தளவு தூரம் பாதிக்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் வடக்கு மக்களுக்கு செல்கின்ற தொடர்ச்சியான இராணுவ கட்டுப்பாடுகள் குறித்த சமிக்ஞைகள் என்பன குறித்து நாம் கரிசனை கொண்டுள்ளோம். எனவே இந்தக் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் வடக்குக்கான இயல்பான பிரயாணம் விரைவில் அமுலுக்கு வரும் என்றும் நம்புகின்றோம் என்று ஜோன் ரங்கின் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வெளிநாட்டவர்கள் வடக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பிரித்தானியா கரிசனை!