Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடந்து முடிந்த இரு மாநில சட்டபேரவைத் தேர்தல்களிலும் நோட்டாவில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் ஆணையத் தகவல் தெரிவிக்கிறது. மக்களவைத் தேர்தலில்தான் வாக்கு எந்திரத்தில் நோட்டா என்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்கிற பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டது.

அது அப்போது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்போதும் கூட மக்கள் நோட்டா பட்டனில் அதிக ஆர்வம் காட்டவில்லை. தங்களுக்கு விருப்பமனாவர்களுக்கு வாக்களித்து மகிழ்ந்தனர். இப்போது மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்துவிட்ட நிலையில் இரு மாநிலங்களிலும் மக்கள் நோட்டா பட்டனில் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹரியானாவில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்று இருந்தாலும், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 தகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி உள்ளதால் அங்கு தனித்து ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் சிவசேனாவின் ஆதரவை பாஜக நாடவுள்ளது என்று தெரிய வருகிறது. வெளியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தர சம்மதித்தாலும் பாஜகவின் தாயக அமைப்பான ஆர் எஸ் எஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவை ஏற்கத் தேவையில்லை என்று பாஜகவுக்கு அறிவுறுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா 63 இடங்களையும்,காங்கிரஸ் 42 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் பெற்றுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஹரியானா, மஹாராஷ்டிரா இரு மாநிலத் தேர்தல்களிலும் நோட்டாவில் மக்களுக்கு நோ ஆர்வம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com