Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ திறைசேரிக்கு சொந்தமான 100 கிலோக்கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க நிராகரித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் ஷியாமை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பெரேராவே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஷிராந்தி ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஷிராந்தி ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளவிடாமல் தடுத்ததாகவும், அந்த விசாரணைகளை இருட்டடிப்புச் செய்ய முயற்சித்ததாகவும் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மீதும் வாஸ் குணவர்தனவின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால், ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை இருட்டடிப்புச் செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை அனுர சேனாநாயக்க பி.பி.சி.யிடம் மறுத்துள்ளார். குறித்த தங்க விற்பனை முயற்சியில் ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்புபட்டிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்காலத்தில் நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to 100 கிலோ தங்க விற்பனையுடன் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பில்லை: அனுர சேனாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com