Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மீது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவியான ஷாமலி பெரேராவே குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் ஷாமலி பெரேரா குறிப்பிட்டுள்ளதாவது, “திறைசேரியினால் 500 இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எனது கணவரான வாஸ் குணவர்த்தன விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணைகளின் போது, தங்க விற்பனையில் ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதன்போது, என்னுடைய கணவரை விசாரணைகளை நிறுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உத்தரவிட்டார். அத்துடன், இந்த விடயம் பொய்யானது என்று கூறி ஊடகங்களுக்கு கருத்துரைக்குமாறும் கணவரிடம் கோரினார். எனினும், அதனை மேற்கொள்ளாத நிலையிலேயே எமது கணவரும், மகனும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.” என்றுள்ளார்.

இதனிடையே, மாலபே தொழிநுட்ப கல்லூரி மாணவன் நிப்புன ராமநாயக்கவை கடத்தி தாக்குதல் நடத்தியதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது மனைவி மற்றும் மகன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com