Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டத் திருத்தங்கள் செய்யப்படவுள்ள நிலையில், பதவிக் காலத்தையும் 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை மக்களால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு பொலனறுவை நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் அரசியலமைப்பினை திருத்துவது தொடர்பில் துறை சார் நிபுணர்களால் ஆராயப்பட்டுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருக்கும் வரையறையற்ற அதிகாரங்களை அகற்றி பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கி அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் பணியகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பான சந்திப்பொன்றில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கலந்து கொண்டேன். எனது ஆட்சி காலம் 6 வருடங்களாக வரையறைக்கப்பட்டுள்ளது. அதனை 4 வருடங்களாக குறைக்குமாறு கோரியிருந்தேன். ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல்களை நடத்துவது நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என அவர்கள் தெரிவித்தனர். எப்படியிருப்பினும், எனது வற்புறுத்தலுக்கு அமைய 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கு அவர்கள் இணங்கினர்.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி பதவிக் காலம் 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாக குறைக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com