நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை வலுவற்றதாக்கி பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் 19வது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபினை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாகவும், விரைவில் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வகட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன்பின்னர், அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்போதே, 19வது திருத்த சட்டத்திற்கான உத்தேச வரைபு ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவரும் விடயத்தில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக உருவாகியுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் செவ்வாய்கிழமை மீண்டும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19வது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். அத்தோடு, பாராளுமன்றத்திலும் சமர்பிக்கப்படவுள்ளது.

0 Responses to 19வது திருத்த வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம்; விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!