Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 328 ஓட்டங்களை எடுத்தது.

அஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 105 ஓட்டங்களையும், ஆரொன் பிஞ்ச் 81 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிக பட்சமாக எம்.எஸ். தோனி 65 ஓட்டங்களையும், அஜிங்க ராஹேன் 44 ஓட்டங்களையும், ஷேகர் தவான் 45 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இந்தியாவின் அதிர்ச்சித் தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சு முக்கிய காரணமானது. அதோடு தோனி, ஜடேஜா ஆகியோரின் ரன்-அவுட் ஆட்டமிழப்புக்களுக்கும் இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தன.

இதையடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மறுபடியும் மோதவுள்ளன. முதல் சுற்றுப் போட்டிகளின் போது நியூசிலாந்து அணியிடம், ஆஸ்திரேலியா போராடித் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலக கோப்பை அரையிறுதிப் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட முதலாவது 300 ஓட்டங்கள் இன்றைய போட்டியிலேயே பெறப்பட்டது. அதோடு 300க்கு அதிகமான ஓட்டங்களை இதுவரை எந்தவொரு அணியும் அரையிறுதிப் போட்டி ஒன்றில் துரத்தி அடித்து வெற்றி பெற்றதில்லை. மேலும் கடந்த நான்கு மாதங்களாக அஸ்திரேலியாவுடன் விளையாடிய எந்தவொரு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதில்லை.

0 Responses to 95 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com