இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு 83 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், இந்திய (தமிழ்நாட்டு) மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இலங்கை கடற்பரப்புக்குள்ளேயோ அல்லது நிலப்பரப்புக்குள்ளேயோ அனுமதி இன்றி நுழைவதற்கு அனுமதிக்க முடியாது. அவ்வாறு நுழைவதானது சட்டவிரோத நடவடிக்கை என்பதுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அஜித்.பி.பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 83 நாட்கள் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை. இவை அப்பட்டமான பொய் என்பதுடன், இலங்கையின் கடல் எல்லைக்குள் வேறுநாட்டவரை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான தீர்மானத்தை மீனவப் பிரதிநிதிகள் எடுக்க முடியாது. இது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கமே எடுக்க முடியும்.
தமிழக மீனவர்கள் கடந்த காலத்தில் 120 நாட்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். தற்பொழுது அதனை 83 நாட்களாகக் குறைத்துள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் எவரும் அனுமதி இன்றி உள்நுழைய முடியாது என்பதே எமது தெளிவான நிலைப்பாடாகும்.
இந்தியாவுடன் இலங்கை நட்புறவைப் பேணிவந்தாலும், இலங்கையின் கடல் எல்லை மற்றும் நில எல்லைக்குள் அத்துமீறு நுழைவது தொடர்பான விடயத்தில் அரசாங்கம் கண்டிப்பாக இருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி என வெளியான செய்திகளில் உண்மையில்லை: அஜித்.பி.பெரேரா