கோடாரித் தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேன (வயது 40) இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
பிரியந்த சிறிசேன நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை பொலனறுவையில் வைத்து கோடாரியினால் தாக்கப்பட்டிருந்தார். அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
சிகிச்சைகளுக்காக பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்த அவர், பின்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, பிரியந்த சிறிசேனவை தாக்கினார் எனக் கூறப்படும் லக்மால் என்பவர் பொலனறுவை பக்கமுன பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சரணடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஏப்ரல் 08ஆம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 Responses to மைத்திரியின் சகோதரர் உயிரிழப்பு!