Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் ரஷ்ய ஊடகம் ஒன்றிட்கு சிரிய அதிபர் அசாத் பேட்டியளித்த போது சிரியாவில் இன்னும் அதிக ரஷ்ய பங்கேற்பைத் தான் விரும்புவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதாவது ரஷ்யா விரும்பினால் சிரியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதையும் சிரிய துறைமுக நகரமான டார்ட்டுஸ் இல் ரஷ்யாவின் கடற்படைத் தளத்தை விரிவாக்குவதையும் தான் நிச்சயம் வரவேற்பேன் என்று அசாத் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ரஷ்ய செய்தி ஊடகமான RT வெளியிட்ட தகவலில் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய தரைக் கடல் பிராந்தியங்களில் ரஷ்ய்வின் பிரசன்னம் எந்தளவு அதிகமாக உள்ளதோ அந்தளவு அங்கு பாதுகாப்பு சமநிலை நிலவும் என அதிபர் அசாத் குறிப்பிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அப்போதைய சோவியத் யூனியன் அரசு சிரியாவின் துறைமுக நகரான டார்ட்டுஸ் இல் தனது கப்பற் படைத் தளத்தை அமைத்திருந்ததுடன் அங்கு சுமார் 40 வருடங்கள் ரஷ்ய இராணுவத் தலைவர்கள் தங்கியிருந்தனர். எனினும் 2013 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததினால் இவர்கள் வெளியேறினர். இந்நிலையில் சிரியா மற்றும்  உக்ரைன் ஆகிய இரு நாட்டு விவகாரங்களுக்கு இடையிலும் இரு தொடர்புகள் இருப்பதாகவும் ஏனெனில் இவையிரண்டுமே ரஷ்யாவுக்கு முக்கியமான நாடுகள் மற்றும் இவை மேற்குலகின் கைப்பாவையாக மாறும் பட்சத்தில் ரஷ்யா பலவீனமடையும் என அவை எதிர்பார்ப்பதும் ஆகும் என அதிபர் அசாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிரியாவின் Daesh இலிருந்து ISIS இனை முற்றாகத் தோற்கடிக்கும் எண்ணம் அமெரிக்க  மற்றும் கூட்டணி நாடுகளுக்கு இல்லை என்றும் அசாத் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் விமானப் படையை விட அளவில் மிகச் சிறியதான சிரிய விமானப் படை, கூட்டணி நாடுகளின் விமானத் தாக்குதல்களை விட அதிக வான் தாக்குதல்களை Daesh மீது தொடுத்துள்ளது என அசாத் கூறியுள்ளார். மேலும் கூட்டணி நாடுகளில் அங்கம் வகிக்கும் சவுதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் தமது நாட்டுக்குள்ளேயே தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் சிரியாவிலுள்ள ISIS இனை எவ்வாறு தோற்கடிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிரியாவுக்கு சர்வதேச அமைதி காக்கும் படையினர் அனுப்பப் படும் சந்தர்ப்பத்தையும் அசாத் எதிர்ப்பதுடன் அவ்வாறான ஓர் நடவடிக்கை Daesh இனை முற்றாக ISIS இற்கு தாரை வார்த்து தனி மாநிலமாக உருவெடுப்பதற்குச் சமன் என்றும் உரைத்துள்ளார். உள்நாட்டுப் போர் வெடித்த பின் இதுவரை அமெரிக்காவுடன் தூதரக உறவை மேற்கொண்டிராத சிரியாவின் அதிபர் அசாத் அண்மையில் தான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் பலி எண்ணிக்கை 200 000 ஐத் தாண்டிச் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரியாவில் இன்னும் அதிக ரஷ்ய பங்கேற்பு வேண்டும் என்கிறார் அதிபர் அசாத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com