ஏமனில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதால் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை செயலர் ஜெய்ஷங்கர் அறிவுறுத்தி உள்ளார்.
ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு அதிபர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் உடனடியாக அங்குள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி இந்தியாவுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்ஷங்கர் அறிவுறுத்தி உள்ளார்.
அதோடு அங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செவிலியர்களாக பணி புரிகிறார்கள் என்றும் தெரிவித்துள்ள ஜெய் ஷங்கர், அவர்களை கவனமாக இருக்கும்படியும் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய வந்துவிடுவது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

0 Responses to ஏமனில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதால் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும்: ஜெய்ஷங்கர்