Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு விஜயமொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்றார். இந்த விஜயத்தின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவர் சந்திக்கமாட்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் இடையில் கடந்த சில காலமாக கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே வடக்கிற்கு வரும் பிரதமர், முதலமைச்சரைச் சந்திப்பபைத் தவிர்த்துள்ளார். இதனை, அவர் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செய்வியொன்றிலும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை நோக்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த வடக்கு விஜயத்தின் போது பல்வேறு தரப்பினருடனான சந்திப்புக்களிலும், நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

பிரதமரின் வடக்கு விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல்:

27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ். நாக விகாரையில் சமய வழிபாடுகள், காலை 10.00 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம், முற்பகல் 11.00 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும். இதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் முற்பகல் 11.15 மணிக்கு வீட்டுக்குத் தலைமை தாங்கும் பெண்களுடனான சந்திப்பு, முற்பகல் 11.30 மணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களின் நலன்புரி நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல், நண்பகல் 12.00 மணிக்கு மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், நண்பகல் 12.30 மணிக்கு மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறும். இதையடுத்து, பிற்பகல் 03.30 மணிக்கு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி விஜயம், மாலை 05.00 மணிக்கு சோமசுந்தர பரமச்சாரிய ஆதீன பிரதானியை சந்தித்தல், மாலை 05.30 மணிக்கு நல்லூர் கோவிலில் சமய வழிபாடு, மாலை 06.30 மணிக்கு யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகத்துடனான சந்திப்பு, இரவு 07.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபை யாழ். அத்தியட்சாதீன ஆயர் டானியல் தியாகராஜாவுடனான சந்திப்பு, இரவு 07.45 மணிக்கு ஜும்மா பள்ளிவாசலில் சமய வழிபாட்டுடன் 27ஆம் திகதி நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.

28ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ். மாவட்ட தேசிய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பு, காலை 09.30 மணிக்கு சிவில் பிரதிநிதிகள் சந்திப்பு, காலை 10.30 மணிக்கு ஊர்காவற்றுறை விஜயம், நண்பகல் 12.00 மணிக்கு நாகவிகாரையில் சமய வழிபாடு, பிற்பகல் ஒரு மணிக்கு பலாலி படைத் தலைமையகத்தில் மதிய உணவு, பிற்பகல் 02.30 மணிக்கு பலாலி விமானப்படைத் தலைமையக விஜயம், பிற்பகல் 03.30 மணிக்கு காங்கேசன்துறை கடற்படைத் தலைமையக விஜயம், மாலை 05.00 மணிக்கு பலாலி படைத் தலைமையகத்தில் இராணுவ, விமான, கடற்படை, பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பு என்பன இடம்பெறவுள்ளன.

29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு கிளநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சந்திப்பு, காலை 10.00 மணிக்கு வீட்டுத் தலைமைதாங்கும் பெண்களுடனான சந்திப்பு, காலை 10.15 மணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களின் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல், காலை 10.45 மணிக்கு மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், முற்பகல் 11.15 மணிக்கு பொதுமக்கள் சந்திப்பு, பிற்பகல் 02.00 மணிக்கு முல்லைத்தீவில் வீட்டுக்குத் தலைமைதாங்கும் பெண்களுடனான சந்திப்பு, பிற்பகல் 02.30 மணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களின் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல், பிற்பகல் 03.00 மணிக்கு மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் முதலான நிகழ்வுகளுடன் பிரதமரின் வடக்கு விஜயம் முடிவுக்கு வருகின்றது.

0 Responses to வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை ரணில் நாளை ஆரம்பிக்கின்றார்; விக்னேஸ்வரனை சந்திக்கமாட்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com