ஒரு நாள் இந்த உலகம் என்னை திரும்பிப் பார்க்கும்.. இறந்த விமானி..
அல்ப்ஸ் மலைக்காவியம்… செய்திக்கதை..
காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் என்று பாடும் ஒரு பாடல்.. காதல் என்ன வெல்லாம் செய்யும் என்பதை அம்பிகாபதி அமராவதி கதையை முறியடித்து இன்னொரு காதல் கதை.. எயார் பஸ் ஏ 320 அல்ப்சில் மோதவைக்கப்பட்ட கதை..
அல்பஸ் மலையில் மோதிய ஜேர்மன் விங்ஸ் விமானத்துடன் ஒரு காதல் கதையும் கரை புரண்டோடியுள்ளதுதான் இன்றைய உலக சுவாரஸ்யம்…
அன்று கடலில் பனிக்கல்லோடு மோதியது டைட்டானிக் காதல்கதை இன்று எயா பஸ் விமானத்துடன் விண்ணில் பறந்து அல்ப்ஸ் மலைக்கல்லோடு மோதியது இன்னொரு காதல் கதை..
காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்…
ஆம்.. காதலால் எதுதான் முடியாது..
காதல் உன்னை தொட்டால் அது தொடரும் அதோ பார்… பிரிவு இல்லை இடையில் வா போவோம்.. டைட்டானிக் ஒலி இப்போது அல்ப்ஸ் மலையில் கேட்கிறது….
டைட்டானிக் காதலா இல்லை ஜேர்மன் விங்ஸ் விமானக் காதலா.. எந்தக்காதல் அழிவில் பெரிய காதல்..
காதல் தோல்வியால் விமானத்தை அல்ப்ஸ் மலையில் மோதிச் சிதறினார் 27 வயதுடைய இளம் ஜேர்மனிய விமானி அன்றியாஸ் லுப்பிற்ஸ் என்று இன்றைய காலைப் பிரான்சிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல… ஆவீன.. மழை பொழிய.. மாவீரம் போகுதென்று விதை கொண்டோட, மனையாள் மேல் பூதம் பிடிக்க.. வீடு தீப்பற்றி எரிய.. அரசனின் காவலர் வரிப்பணம் எங்கே என்று வாள் முனையில் கைது செய்ய தடுமாறிய குடியானவனின் நிலை விமானி அண்டிறியாஸ் லுப்பிற்சிற்கு..
விமானத்தை மலைச் சுவரில் மோதி வாழ்வை முடிப்பதைவிட மாற்று வழியற்ற நிலையில் சம்பவங்கள் படிப்படியாக நிகழ்ந்துள்ளன..
கண்களில் நீர் கைக்குட்டையால் துடைத்துக் கொள்கிறான்…
கல்லான மனங்களையும் கரையவைக்கும் சோகம் ஒன்று..
விமானத்தை மலையில் மோதுவதற்கு முதல் நாள் இவருடைய காதலி காதலை முறித்துக்கொண்டு விடை பெற்றுள்ளாள்..
காதல் தோல்வியால் மனமுடையந்த அவன்.. இருந்து பார் ஒரு நாள் இந்த உலகமே என்னைத் திரும்பிப் பார்க்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.
தன் காதல் கல்வெட்டை அல்ப்ஸ் மலைச்சுவரில் எழுதப்போகிறேன்.. என்று அவன் அறிந்தானா.. அது அவனுக்கே விளக்கம்..
இன்று அவரை முழு உலகமுமே திரும்பிப்பார்க்கும்படியாக வைத்துள்ளான்.. இறந்தவர்களுக்காக அல்ப்ஸ்சில் அமைக்கப்படும் தூபி அவனுடைய காதலுக்கான சமாதியாகவும் அமையப்போகிறதை அறியும் காதலி என்ன செய்யப்போகிறாள்..
சோகம் இரண்டு…
இதற்கு முன்னதாக அவருக்கு இன்னொரு சோகச் செய்தியும் கிடைத்துள்ளது, டிப்பிரசன் நோய்க்கு ஒன்றரை வருடம் வைத்தியம் செய்த இவர் ஓர் உளவியல் நோயாளி என்பது வைத்தியசாலையால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆகவே இவர் விமானியாக இனி வாழ்வில் என்றுமே பணியாற்ற முடியாத துயரமும் கிடைத்தது.. இது சோகத்தில் எல்லாம் பெரும் சோகம்…
விமானியாக ஆசை கொண்டு 14 வயது முதலே விமானிகள் பயிற்சிக்கழகத்தில் சேர்ந்த வாழ்வு முற்றுப்பெறுகிறது..
ஒரு கையில் காதல் தோல்விக் கடிதம்… இன்னொரு கையில் பைத்தியப் பட்டத்துடன் வேலையைப் பறித்தெடுக்கும் கடிதம்..
இரண்டு மனமும் பறிபோய் நின்றான்..
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற நிலைக்கு அந்த இளைஞன் வருகிறான்…
இரண்டு உண்மைகளையும் மறைத்துக் கொண்டு விமானத்தில் ஏறுகிறான்..
ஆம்… அவனுக்கான தீர்வு இந்தப் பூமிப்பந்தில் இல்லை…
மூன்றாவது வழியைத் தேடி நடக்கிறான்.. தன்னையும் அழித்து தன்னோடு பயணித்த பாவத்திற்காக 149 பேர்களுடைய உயிர்களையும் காவு கொண்டு ஒரு துன்ப சரித்திரத்தை படைக்கிறான்..
அம்பிகாபதி அமராவதி காதலும், ரோமியோ யூலியட் காதலும் காதலன் காதலியுடன் முடிந்தது.. ஒதல்லோவின் காதல் காதலியை கொன்று முடிகிறது… ஆனால் இவனோ இழந்த காதலுக்காக விமானத்தையே மோதுகிறான்..
காதல்தான் எத்தனை வலிமையானது..
இத்தனை பேரையும் ஏமாற்றி உலகத்தின் இராட்சத விமானமான எயாபஸ் ஏ 320 நிர்வாகத்தையே ஏமாற்றிய இவன் பைத்தியக்காரனா இல்லை இவனை பணிக்கு அமர்த்தி பயணிகள் விமானத்தையும் பறி கொடுத்து பரிதவித்து நிற்கும் ஜேர்மனிய லுப்ரான்சா நிறுவனத்திற்கு பைத்தியமா என்பது சுவாரஸ்யமான கதையே..
இறந்தவர்களின் உடலங்கள் தேடப்படுகின்றன, இதுவரை ஓர் உடலம் கூட முழு உடலமாக எடுக்கப்படவில்லை துண்டும் துணிக்கையுமாக நேற்றுவரை 600 உடலப் பாகங்கள் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளன.
உறவினர்களின் மரபணுக்களை வைத்தே இப்போது இறந்தவர்களின் சதைத் துண்டுகளுக்கு பெயரிடவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது..
இப்போது இறந்தவர்களுக்கான நஷ்டஈட்டை வழங்கவேண்டிய துயரமும் பைத்தியக்காரனை பைலட்டாக வைத்திருந்த லுப்லரான்சா விமான சேவைக்கே ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்து மரணித்த ஒவ்வொரு பயணிக்கும் தலா 50.000 யூரோவை வழங்க முடிவு செய்துள்ளது, 144 பயணிகளுக்கும் இது வழங்கப்படும் அதேவேளை பணியாளர்களுக்கான கொடுப்பனது தனியானது.
ஒரு காதலுக்காக உயிர் கொடுத்து அல்ப்ஸ் மலையில் காவியமானவர்கள்.. இந்தப் பைத்தியக்காரனோடு ஏன் பயணிக்க வேண்டும்…
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்… ஆனால் மனமும் இல்லை என்பதை அல்ப்ஸ் மலையில் எழுதினான் இந்தக் காதலன்…
அல்ப்ஸ் மலையில் இறந்தவர்கள் ஆவிகள் உயிர்களை எடுப்பதல்ல காதல்.. உயிர்களை வாழ வைப்பதுதான் காதல் என்ற உண்மையை மலைச்சுவரில் மோதிக்கொண்டிருக்கின்றன..
மலையில் மோதி உயிர்விட்ட காதலர்கள் உலகில் ஏராளம் ஆனால் ஒரு காதலுக்காக ஒரு நொடியில் 149 பேர் உயிர்விட்ட கதை உலக சரித்திரத்தில் இதுதான் முதல் தடவை..
இது காதலா சோகமா… உலக சரித்திரமா.. உலகப் பெரும் அவலமா..? காதல் மலையிலிருந்து விழுகிறதா இல்லை எழுகிறதா… அல்ப்ஸ் அழுகிறதா.. அன்றியாஸ் நீதான் பதில் தரவேண்டும்…
காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்…
கி.செ.துரை
அலைகள்

0 Responses to காதல் தோல்வியும் வேலை இழப்பும் விமான மோதலுக்குக் காரணம்.... அதிர்ச்சி