Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

பதிந்தவர்: தம்பியன் 27 March 2015

பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 91 வயதான வாஜ்பாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அந்த விருதினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளது.

ஜக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த கே.சி.தியாகி, இது எங்களுக்கு மிகவும் பெருமையளிக்கும் விசயம். அவரது தலைமையில் நாங்கள் பணியாற்றி உள்ளோம். இந்த விருதை பெற முழுத் தகுதியும் உள்ளவர் வாஜ்பாய் என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எல்.புனியா, வாஜ்பாய்க்குதான் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று விருது வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

மத்திய இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, நாட்டுக்கு சேவை செய்த பண்டிட் மதன் மோகன் மாளவியாவும், அடல் பிகாரி வாஜ்பாயும் பாரத ரத்னா விருது பெற தகுதியானவர்கள். பாஜகவுக்கு மகிழ்ச்சியாவும், பெருமையாகவும் உள்ளது என்றார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, வாஜ்பாய் சேவை என்றும் மறக்க முடியாது. இவருடன் வெளிநாட்டு பயணம் சென்றது என்றும் எனது நினைவில் நிற்கிறது. வாஜ்பாய் சாகிப்புக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாரத ரத்னா விருது பெறும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஒரு உண்மையான அரசியல்வாதி. வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும். அவர் நலம் பெற என் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்; முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மென்மையானவர் அதே நேரத்தில் ஆற்றல் மிக்க தலைவர். அவர் காலத்தில் சிறப்பாக நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டம், தங்க நாற்கரை சாலை திட்டம் மற்றும் அண்டை நாடுகளுடன் அவர் வளர்த்த அருமையான நட்புறவு போன்றவை இன்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் வாஜ்பாய் அவர்களின் நிர்வாக திறமை சிறுபான்மையின மக்களின் நலனையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதினை வழங்கி மாபெரும் தலைவரான வாஜ்பாய் அவர்களை கெளரவிக்கப்படும் இந்நாளில், அவரை மனமார வாழ்த்துவதோடு மட்டுமன்றி நாட்டிற்கு அவர் ஆற்றிய அரும் பணிகளுக்காக நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com