Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வீதி நிர்மாணிப்பிற்காக சுவீகரித்த காணிகளுக்காக 400 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டியுள்ள போதும், இதற்காக 5 சதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய (வியாழக்கிழமை) பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவின் வாய்மூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்திக்குப் பணம் இல்லாததால் அதற்கு தேவையான பணத்தை வழங்குமாறு கடந்த ஆட்சியில் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனியார் மற்றும் அரச வங்கிகளுக்கு பணம் வழங்க நேரிட்டது. தேசிய சேமிப்பு வங்கி 51 பில்லியன் ரூபா வழங்கியது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எதிர்காலத்தில் நாம் இவ்வாறு அழுத்தம் வழங்கப் போவதில்லை. கடந்த கால வீதி அபிவிருத்தி தொடர்பில் நெடுஞ்சாலை அமைச்சு விசாரணை செய்து வருகிறது என்று ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த ஆட்சியில் சுவீகரித்த காணிகளுக்கு 400 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியுள்ளது: ரணில்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com