Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பழிவாங்கப்படுகின்றார். முன்னாள் அமைச்சர்கள் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆட்சி எமக்கு வேண்டாம். ஏனவே, இந்த ஆட்சியை நாம் விரைவில் மாற்றுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறை மஹாபோதி விகாரையில் நேற்று வியாழக்கிழமை சமய வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் அங்கிருந்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என மக்கள் வாக்களித்தனர் என்கின்றனர். ஆனால் இன்று மாறாக மாகாண சபையில் ஆட்சி மாற்றப்பட்டுள்ளது. பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பணி செய்த சமுர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா? வேண்டாம். விரைவில் நாம் இந்த ஆட்சியை மாற்றி மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற சூழ்நிலை உருவாக்குவோம். மிக விரைவில் ஆட்சியை மாற்றுவோம்.” என்றுள்ளார்.

0 Responses to நாம் விரைவில் ஆட்சியை மாற்றுவோம்: மஹிந்த

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com