புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30ஆக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியிலிருந்து 16 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து 14 பேரும் அமைச்சரவை அமைச்சர்களாக அங்கம் வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு, அமைச்சரவை அந்தஸ்தற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவையை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. வரும் வாரமளவில் அமைச்சரவை பதவியேற்கும் என்று தெரிகிறது.

0 Responses to புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 30ஆக வரையறுக்கப்படும்: ஐ.தே.க