Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்தானத்தை அடுத்து நேற்று காஷ்மீரில் கலவரம் நடைப்பெற்றது.

காஷ்மீர் பிரிவினைவாதக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று இந்தியா விதித்த நிபந்தனைக்கு பாகிஸ்தான் கட்டுப்படவில்லை.இதனால் நேற்று டெல்லியில் நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்தானது. இதையடுத்து காஷ்மீரில் பிரிவினைவாதக் கட்சிகள் நேற்று முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.குரியத் கட்சியின் தலைவர் ஹிலானியை வீட்டுக்காவலில் வைத்திருப்பதைக் கண்டித்தும், அதற்கு எதிர்க்கோஷங்கள் எழுப்பியும் பிரிவினை வாதக் கட்சித் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரு நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தை ரத்து செய்துள்ளதால் எல்லையில் தீவிரவாதத் தாக்குதல் நடைப்பெறும் அச்சம் உள்ளது என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

0 Responses to இந்தியா-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து: காஷ்மீரில் கலவரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com