எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் மொஹம்மெட் பாடியே மற்றும் ஏனைய 16 உறுப்பினர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு மத்தியதரைக் கடலுக்கு அண்மையிலுள்ள போர்ட் சயிட் என்ற நகரில் போலிஸ் நிலையம் ஒன்றைத் தாக்கி சில போலிசார்களைக் கொலை செய்த குற்றத்துக்காகவே முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் பாடியே மற்றும் மூத்த உறுப்பினர்களான மொஹம்மெட் எல் பெல்ட்டாகை, சஃப்வட் ஹெகஷை உட்பட 16 பேருக்கு எகிப்து நீதிமன்றம் சனிக்கிழமை ஆயுள் தண்டனைத் தீர்ப்பு விதித்துள்ளது.
இதைவிட இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதே நேரம் நீதிமன்றத்துக்கு சமூகம் அளித்திருக்காத மேலும் 76 பேருக்கும் இதே தீர்ப்பை எகிப்து நீதிமன்றம் அளித்துள்ளது. இதில் பாடீயேவுக்கு முன்னரும் எகிப்து நீதிமன்றம் வேறு சில குற்றங்களுக்காக மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைத் தீர்ப்புக்களை அளித்து இருந்தது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு எகிப்தில் ஆட்சியில் இருந்து விரட்டப் பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களுக்கு ஒரே நாளில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to முஸ்லிம் சகோதரத்துவக் கட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதித்த எகிப்து