இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரானப் போராட்டங்களைத் தொடர வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா தமது இல்லத்தில் விருந்து வைத்து உபசரித்தார். இதைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கொச்சைபடுத்திக் கருத்து வெளியிட்டார் என்று, அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் கடந்த வாரத்திலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு 4ம் தர மக்கள் கூற பேசக் கூசும் வகையில் பேசியுள்ளார் என்றும், இது கண்டிக்கத் தக்கதுதான் என்றாலும், அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள், மாணவ மாணவிகள் தங்கள் மனதில் ஏற்பட்ட வலி காரணமாக போராட்டங்கள் நடத்தி வருவதை தாம் அறிந்து வைத்துள்ளதாக ஜெயலலிதா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதிமுக தொண்டர்கள் அற வழியில்தான் போராட்டம் நடத்தி உள்ளனர் என்றும், இதனால் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பில்லாமல் நடந்துக்கொண்ட தொண்டர்கள் இனி இந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டாம் என்று
கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரானப் போராட்டங்களைத் தொடர வேண்டாம்: முதல்வர் ஜெயலலிதா