Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைந்து மீட்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள 37 தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு வெளியுறவுத்துறை மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், படகு பழுதால் இலங்கை கடல் பகுதிக்கு சென்ற 4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கெட்டுக் கொண்டுள்ளதோடு, தமிழக மீனவர்கள் திசை தவறியே இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்ல நேர்ந்துள்ளது என்றும், இதை இலங்கை கடற்படையினர் மன்னித்து மீனவர்களை நாட்டிற்குத் திரும்ப விடாமல் கைது செய்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டு உள்ளார்.

0 Responses to தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com