மக்கள் நல பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மக்கள் நல இசைப் பாடகர் கோவனை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் இவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.இதை எதிர்த்து கோவன் தரப்[பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுத்து இருந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுக்கப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவனை காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

0 Responses to கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்