Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ நினைவெழுச்சி நாளானது இன்று கனடா நாடாளுமன்றத்திலும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கனடா ஒன்ராரியோ நாடாளுமன்றில் கொன்சவேட்டிவ் ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர் Jack மச்லறேன் இன்று தமிழ் நினைவெழுச்சி நாள் பற்றி ஓர் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய Jack MacLaren, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் உயிரிழந்த தமது உறவுகளை கார்த்திகை 27இல் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை போர்க்குற்றம் புரிந்த எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்புத் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாட்டினூடாக கனடிய மக்களும் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.

இழந்த தமது உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவு கூரும்; இந்நாளில், தமிழினவழிப்பின் நீதிக்காக போராடுவதுடன், தாய் நாட்டில் இனவெறியற்ற அமைதியான சுழலை ஏற்படுத்தும் முகமாகவும் தமிழ் மக்கள் செயற்பட்டு வருவதாக Jack MacLaren தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கனடா நாடாளுமன்றத்திலும் தமிழின நினைவெழுச்சி நாள் அனுஷ்டிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com