Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு பூராவுமுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் இன்று வியாழக்கிழமை காலை 08.00 மணி முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நோயாளர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தேசிய சம்பள கொள்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும். இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன்வைத்தே அரச வைத்தியர்கள் இந்தப் பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இத் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை பொறியியலாளர்கள் சங்கம், இலங்கை நிர்வாக சேவையாளர்கள் சங்கம், இலங்கை கல்வி சேவை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை பட்டய கணக்காளர்கள் சங்கம், இலங்கை பல் வைத்தியர்கள் சங்கம், இலங்கை மிருக வைத்தியர்கள் சங்கம், இலங்கை ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம், இலங்கை விவசாய நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை கட்டட கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட 18 தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நளிந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்னவுடன் கடந்த திங்கட்கிழமை மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். இருப்பினும் இப்பேச்சுவார்த்தையில் திருப்திகரமான பதில் கிடைக்கப் பெறாததாலே தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாம் இன்று காலை 8.00 மணிக்கு வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அதனைமுன்னெடுக்கும் விதம் தொடர்பாக இன்று கூடும் எமது சங்கத்தின் மத்திய குழுவே தீர்மானிக்கும். இன்று வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் எமது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் திடீர் விபத்து சேவை மற்றும் அவசர மருத்துவ சேவைகளில் வழமை போன்று ஈடுபடுவர்.” என்றுள்ளார்.

0 Responses to நாடு பூராவும் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு; நோயாளர்கள் அவதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com