தமிழக அரசுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்று பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. இவ்வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஆஜராக சென்னை வந்திருந்த சுப்ரமணிய சாமி, நீதி மன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் மாற்றி மாற்றி ஆட்சி செய்துகொண்டு இருக்கும் திமுக, அதிமுக ஆட்சியின் திட்டமிடப் படாத செயல்பாடுகளே சென்னை இன்று மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கக் காரணம். எனவே, மாநில அரசே மழை நிவாரண நடவடிகைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். இதனால், தமிழகத்துக்கு மழை நிவாரணப் பணிகளுக்கு என்று மத்திய அரசு நிதி வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

0 Responses to தமிழக அரசுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது: சுப்ரமணிய சாமி