பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலீதா ஷியா தனது பதவிக் காலத்தின்போது ஊழல் செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவருக்கு நேற்று திங்கள்கிழமை பிணை வழங்கப்பட்டது.
பங்களாதேஷின் முக்கிய எதிர்க்கட்சியான தேசியவாதக் கட்சியின் (பி.என்.பி.) தலைவர் காலீதா ஷியா, கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டுவரை அந்த நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார்.
அப்போது, முக்கிய எரிவாயு வயலை கனடா நாட்டு நிறுவனத்துக்குக் குத்தகைக்கு விட்டதில் 200 கோடி டொலர் இலஞ்சமாகப் பெற்றார் என அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கிடையே நீதிமன்றம் வந்த காலீதா ஷியாவுக்கு, நீதிபதி முகமது அமீனுல் இஸ்லாம் ஜாமீன் வழங்கியதாக அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். மேலும், விசாரணைக்காக காலீதா ஜியா டிசம்பர் மாதம் 28ஆம் திகதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாக அவர்கள் கூறியுள்ளார்.

0 Responses to ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு பிணை!