பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்தவொரு காரணத்துக்காகவும் நீக்கக் கூடாது என்று மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட புலிகளை விடுதலை செய்யும் அதேநேரம், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாதுகாப்புத் தரப்பினரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் இட்டவர்கள் நாம். இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது நாட்டையோ வெளிநாட்டவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டாம்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மோசமான பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள். யாழ்ப்பாணத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். இவனுடைய தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை அரசாங்கம் விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும் .
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவன் என்ற ரீதியில் மனச்சாட்சிக்கு உட்பட்ட வகையில் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தேன். உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பையே நாம் ஒழித்திருந்தோம். யுத்தத்தின் பின்னர் வடக்கில் பயங்கரவாதக் குழுக்கள் மீண்டும் தலைதூக்க முயற்சித்தபோதும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் அவை முறியடிக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
எமது ஆட்சிக் காலத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை புனர்வாழ்வளித்து விடுவித்திருந்தோம். இருந்தாலும் மோசமான பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களையே தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தோம்.
அவர்கள் மீது எமக்கு எதுவித தனிப்பட்ட கோபமும் இல்லை. இனவாதக் கட்சிகளின் தேவைக்காகவோ அல்லது அவர்களின் தேவைக்காகவோ அல்லது அவர்களின் அழுத்தங்களுக்காகவோ இவ்வாறானவர்களை விடுவிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்துவது அவசியம்.
இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறது. மறுபுறம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உயிர் மற்றும் தமது குடும்பங்களை அர்ப்பணித்த பாதுகாப்புத் தரப்பினரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்கின்றனர். தப்பு செய்தவர்களை விசாரிப்பதாயின் இராணுவ சட்டம் அல்லது நாட்டில் உள்ள சாதாரண சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த முடியும்.
இதனைவிடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து அவர்கள் நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த கெளரவத்தை இல்லாமல் செய்கின்றனர். முப்படையினர் நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்துவிட்டு தற்பொழுது சிறைக்குச் செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது. அவர்களின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இலங்கைக்கு வரும் ஐக்கிய நாடுகள் விசேட குழு திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமுக்குள் சென்று விசாரணை செய்வதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை முகாமை பார்வையிட அனுமதித்தமையை மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுப்புக்கு சமானமானதாகவே நான் பார்க்கின்றேன்.
அண்மையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு, புலிகளை வாழ்த்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது. யாழ்ப்பாணத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த முடிவுக்குச் செல்வதற்கு அவரை உசுப்பிவிட்டவர்கள் யார். இந்த நடவடிக்கை தொடர்பில் சமூகத்தில் சந்தேகமொன்று காணப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை பாடசாலைகள் மூடப்பட்டதுடன், வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு, கைதிகளை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னணியில் காணப்படும் உண்மை என்ன என்பது கண்டறியப்பட வேண்டும். நாடு எந்த இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
எமது அரசாங்கத்தில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு அமையவே நாம் அவர்கள் மீதான தடையை ஏற்படுத்தியிருந்தோம். தற்பொழுது இத்தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் பற்றி கவனம் செலுத்துவது அவசியமானது.
வெளிநாடுகளில் இருந்து வரும் உயர்மட்ட அதிகாரிகள் வடக்கில் உள்ள இராணுவங்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி ஆலோசனை வழங்கத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டவர்கள் வந்து எமக்கு ஆலோசனை வழங்குவதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் அனுமதிக்க முடியாது. வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டாம்: மஹிந்த