Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனையோடு உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கையின் சீற்றத்தினால் தமது சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் இரா.சம்பந்தன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், அனர்த்ததினால் வாழ்வாதாரங்களையும், சொத்துக்களையும் இழந்து, இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழும் மக்களினது துயரில் தாம் பங்கேற்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை தளர்ச்சியடையாமல் வழங்கி கொண்டிருக்கும் தமிழக அரசிற்கும், ஏனைய அரச மற்றும் தனியார் ஸ்தாபனங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நிலைமை விரைவில் வழமைக்கு திரும்பி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறுவதற்கு தாம் இறைவனை பிரார்த்திப்பதாகவும் இரா.சம்பந்தன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தொடர்பில் கரிசனையோடு இருக்கின்றோம்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com