Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தினஉரை இன்றி ஆறாவது மாவீரர் தினம் வழமைபோல் வந்துபோய்விட்டது.

வழமைபோல் அரசதரப்பினரதும் படைத்தரப்பினரதும் வெற்றிமமதைக்குள் மாவீரர் தினகொண்டாட்டங்களோ உயிரிழந்தவர்களை நினைவுகூரவோசுடர் ஏற்றவோ கூடாது என்ற அர்ப்பரிப்பையும் காணக்கூடியதாக இருந்தது.

புபலம்பெயர் தமிழர்கள் சுதந்திரமாக மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடத்தியுள்ளனர். இலங்கை மண்ணில் அங்கும் இங்குமாக நிகழ்வுகள்,சுடர் ஏற்றல் என்பன தடைகளையும் மீறி அரங்கேறியுள்ளன.

ஆனால் ஒட்டுமொத்த தமிழினமும் தத்தமது மனதில் ஏற்றிவைத்தசுடர் தீபங்கள் அணையாது எரிந்து கொண்டிருக்கின்றது.

தடைகளும் பூட்ஸ் கால்களாலும் மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டிருக்கும்  சுடர் இன்றல்ல என்றென்றும் அணைக்கப்படக்கூடியதல்ல.

நவம்பர்  27 மாவீரர்தினத்தை தாங்கிவரும் பொழுதெல்லாம் அனைவரது மனங்களிலும் ஒருஎதிர்பார்ப்பு, மாவீரர் உரைக்கான காத்திருப்பு. அதுதமிழ் மக்களாக இருக்கட்டும். இலங்கைஅரசதரப்பு, சிங்களத்தரப்பு, கொழும்பில்  நிலைகொண்டுள்ள இராஜதந்திர முகாம்கள் வெளிநாடுகள் எனஅனைவரது கவனமும் நவம்பர 27இல்  வன்னியை நோக்கிக் குவிந்துவிடும். 2009ஆம்ஆண்டுக்குப் பின் மாவீரர் தினஉரைக்காகஎவரும் காத்திருப்பதில்லை. ஆனால் அவர் வருவார் என்ற காத்திருப்புடன் தமிழ்த்தேசியத்தை நேசிக்கின்ற தமிழ் நெஞ்சங்கள் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றனர்.

எப்பொழுதுவருவார்? தமிழினத்தைக் காப்பார்? என்ற கேள்விகளுக்குப் பதில் கூறுவார் எவரும் இல்லை. 2009  மே 19 கடந்தநிலையில் இலண்டனில் இருந்து தொலைபேசியில் ஒருகுரல் ‘மாவீரனாக மரணமடைந்த தலைவருக்கு உலகளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தவேண்டிய நாளில் தமிழ் மக்கள் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்’ என்ற வினா என்னை நோக்கி எழுப்பப்பட்டது.

இதனைபத்திரிகையில் பிரசுரிக்குமாறும் அந்தக்குரல் கேட்டுக்கொண்டது. உண்மையில் அந்தக் குரலுக்குரியவர் தேசியத் தலைவருடன்  நெருக்கமாக இருந்தவர். ஆனால் என்மனம் அந்த ‘நெருக்கமானவரின்” வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கமறுத்துவிட்டது. அவருக்காகக்  காத்திருக்கும் பல இலட்சக்கணக்கானமக்களில் நானும் ஒருவனாகக் கலந்துநின்று இன்றுவரை காத்திருக்கின்றேன்.

போர் முடிவுற்றுமக்கள் போக்குவரத்திற்கெனவன்னிமுழுமையகத் திறக்கப்பட்டபின் முல்லைத்தீவுபுதுமாத்தளன்:அதற்கப்பாலும் சென்றுவரும் சந்தர்ப்;பம் கிடைத்தது.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்குள் சிக்கிஉயிர் தப்பிஅந்தமண்ணைவிட்டுவெளியேறவிரும்பாதுஅந்தமண்ணுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒருபெரியவர் உதிர்த்தவார்த்தைகள் இவை. நந்திக்கடலைவெறித்தனத்துடன் பார்த்துக்கொண்டு‘அவருடையபெயரைக்’ கூறிக்கொண்டுஎவராவதுஎங்கள்முன்வந்துநின்றால் நாங்கள் அனைவரும் ‘அவர்’பின்னால்  போய்விடுவோம். என்றவர் த லைநிமிர்ந்துநின்றநாம்  சொந்தங்களையும் பந்தங்களையும்  உடமைகளையும் இழந்துநிற்கவில்லை;தலைகவிழ்ந்துநெஞ்சைநிமிர்த்திநடக்கமுடியாதுவெறும் நடமாடும் ஜடங்களாக இந்தமண்ணில் வாழ்கின்றோம்’என்றும் கூறினார்.

இன்றையநிலையில் இருந்துசற்றுயோசித்தால் மூன்றுவருடங்களுக்குமுன் அந்தமண்ணின் மைந்தன்  உதிர்த்தவார்த்தைகளின் அர்த்தம் புரியும். ஏனெனில்  தமிழ் மக்களின் லட்சியத்தை, இலக்கை,அபிலாஷைகளைதிசைமாற்றிதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்மாலுமிகள் பயணிக்கும் இவ்வேளையில் நந்திக்கடலோரம் மண்ணில் நின்று விடுதலைத் தீயாய் அனல் பறக்கும் அந்த வாரத்தைகளின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

மொத்தத்தில்  ‘அவர் வருவார்’ என்றகாத்திருப்புக்குள் நடைபெறும் தமிழர் அரசியலைப்பார்த்தால் ‘அவர் வருவார்’ என்றகாத்திருப்பை சாதகமாக்கிக்கொண்டு முன்நகர்த்தப்படும் அரசியலாகவே இருக்கின்றது.

உண்மையிலேயே‘ அவர் வருவார்’ என்று எதிர்பார்த்து இன்றையதமிழர் அரசியலில் காய்கள் நகர்த்ப்படுவதாகத் தெரியவில்லை. இந்த சக்திகளின் உள் உணர்வில்கூட அத்தகைய எண்ணம் துளிகூட இருப்பதாகத் தெரியவில்லை. நாம் எதையும் செய்யலாம்.  எம்மைக் கட்டுப்படுத்த, தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற துணிவுடன் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் அரசியலை முன்னெடுக்கின்றனர். இந்த அதீத துணிவு இவர்களுக்கு எவ்வாறு வந்தது என்பது குறித்து காத்திருக்கும் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது.

மறுபுறம் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் கொண்டிருந்தசொத்துக்களுக்குப் பினாமியாக இருப்பவர்கள் ‘அவர் வருவார் வரும்போது கொடுத்துவிடுவோம்’ எனக் கூறுவதாக ஒரு சமூக ஆர்வலர் கூறினார்.

அதாவதுபோராட்டக் களத்தில் நின்று மாவீரர்களாகிப் போனவர்களின் குடும்பங்கள்  புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் போரில் கால், கைகளை இழந்தோர் பெற்றோரை இழந்தோர் என ஒரு நீண்ட பட்டியல்  உள்ளது.  அதற்கும் அப்பால் தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றி போராட்டக்களம் புகுந்து கால் கைகளை இழந்தவர்களும், துப்பாக்கிகளுடன் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் விடப்பட்டுள்ள ஆயிரமாயிரம்  பெண்போராளிகளும் உள்ளனர்.

போர் நடைபெற்றபோது வீரமைந்தர்கள், வேங்கைகள் எமது இனத்தின் விடிவுக்கான விடிவெள்ளி என்று புகழ்ந்துதள்ளி அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கூட இரகசியமாக கொடுத்துதவிய தமிழ்ச் சமூகம் அந்த வேங்கைகளையும், வீரமகளிரையும் இன்று ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றது.

பெரும்பான்மை இனத்தவர்கள் எம்மை ஒதுக்குகின்றனர், இரண்டாம்  தரப் பிரஜைகளாக நடத்துகின்றனர் என்றெல்லாம் கூக்குரலிடும் தமிழ்ச் சமூகம் விடுதலைக்காகப் போராட்டக் களமிறங்கியபோராளிகளை புழுதிக்குள் தள்ளிவிடும் மனப்போக்கில்  செயற்படுவது வேடிக்கையாகவும் வேதனை தருவதாகவும் உள்ளது. அதே தமிழ்ச் சமூகமும் ‘அவர் வருவார் காப்பார்’ எனக் கூறுவதும் விந்தையாக இருக்கின்றது. தமிழினத்தைஉண்மையாக நேசிப்பவர்களை தூக்கி வீசுவதானது தமிழினம் தன்னைத் தானே வேரறுத்துக் கொள்வதற்கே சமனாக அமையும். எனவே தமிழினத்தை நேசிப்பவர்களை தமிழினம் அரவணைத்து கைகோர்த்துப் பயணிக்க முன்வரவேண்டும்.

அவர் வருவார்’எனக் காத்திருக்கும் அதேவேளையில்  அந்த‘அவரது வாரிசுகளை உங்களின் அக்கினிக் குஞ்சுகளை  பாதுகாக்க மாவீரர் வாரத்தில் திடசங்கற்பம் பூணுங்கள். அதேபோல் ‘அவர் வருவார் அவர் வந்தபின் சொத்துக்களைக் கொடுப்போம்’ எனக்கூறி காத்திருப்பவர்களும் நீங்கள் காத்திருங்கள் ஆனால் நீங்கள் ‘வருவார்’ எனக் காத்திருக்கும் ‘அவர் ‘உருவாக்கிய அக்கினிக் குஞ்சுகள் மறுவாழ்வுபெற அந்த ‘அவரது’ சொத்துக்களை வழங்க முன்வாருங்கள்.

இன்றையமாவீரர் தினத்தில் மாவீரர்களாகிப் போனவர்களும், போர்க்களத்தில் மடிந்துபோன ஆத்மாக்களும் அசரீரியாகக் கூறும் வார்த்தைகள்,கோரிக்கைகள் இவை.

வி.தேவராஜ்

0 Responses to மாவீரர் தினத்தில் மாவீரர்களின் செய்தி இது! - வி.தேவராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com